இலங்கை

நாடுமுழுவதும் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனைகளில் 24 பேர் கைது

இராணுவமும் பொலிசாரும் இணைந்து இன்று நாடுமுழுவதும் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனைகளில் 24 பேர் கைதானதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மாக்கும்புர, மட்டேகொட பகுதிகளில் போதைப்பொருள் வைத்திருந்தமைக்காக முஸ்லிம் நபர் ஒருவர் கைதானார்.
இராணுவ சீருடையை வைத்திருந்தமைக்காக சிங்கள ஒருவர் அங்கு கைது செய்யப்பட்டார்.
புத்தளம் மற்றும் குருணாகலை மாவட்டங்களிலும் கூட்டு சோதனை நடத்தப்பட்டது.
அங்கு தும்மலசூரிய, மாதம்பே பகுதிகளில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சஹ்ரானின் புகைப்படங்களை வைத்திருந்தமை, சஹ்ரானின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட சீ.டீக்கள் வைத்திருந்தமை மற்றும் 12 வாள்களுடன் அவர்கள் கைதாகினர்.
களுத்துறையில் வியாங்கலை, பதுரெலிய ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் துப்பாக்கி வெடிமருந்தை வைத்திருந்தமைக்காகவும், அடிப்படைவாத குறுந்தகவல்களை பரிமாற்றியமைக்காகவும் இரண்டு சிங்களவர்கள் கைதாகினர்.
கம்பஹா மாவட்டத்தின் எண்டேரமுல்லையில் 80 கடவுச் சீட்டுகள் கொண்டிருந்தமை, வாள்கள் வைத்திருந்தமை போன்ற காரணங்களுக்காக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.