இலங்கை

நாடுகடத்த முதல் அறிவுறுத்துங்கள் – டுபாயிடம் கேட்டது இலங்கை

டுபாயில் மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்ட நபர்களை சொல்லாமல் கொள்ளாமல் திருப்பி அனுப்பியமை குறித்து இலங்கை அரசு டுபாய் அரசிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

டுபாய்க்கு சென்ற வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்த அதிருப்தியை டுபாய் வெளிவிவகார அமைச்சர்
அன்வர் மொஹம்மட் கர்காஷிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் முக்கியமான வழக்குகளுக்கு தேடப்படும் சந்தேகநபர்கள் டுபாயில் இருந்து திடீரென திருப்பி அனுப்பப்படுவதால் அவர்கள் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்காலத்தில் இப்படியான விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்துவது சிறந்ததென்றும் அமைச்சர் மாரப்பன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மாக்கந்துர மதுஸுடன் கைது செய்யப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்ட நடிகர் ரோயன் , இன்னும் சில தினங்களில் செய்தியாளர்களை சந்தித்து நடந்தவற்றை கூறப்போவதாக தெரிவித்துள்ளார்.