Breaking News

நாடுகடத்தாதீர் – மாக்கந்துர மதுஷ் மனு

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தவேண்டாமென மாக்கந்துர மதுஷ் மற்றும் சிலர் டுபாய் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பலர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட நிலையில் இவ்வாறான கோரிக்கையை மதுஷ் தரப்பு நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.

இதனால் மதுஷ் மற்றும் பலர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதில் தாமதம் ஏற்படலாமென சொல்லபப்டுகிறது