இலங்கை

நாடுகடத்தப்படுகிறார் மாக்கந்துர மதுஷ் !

டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் எதிர்வரும் 19 அல்லது 20 ஆம் திகதி இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.
டுபாயில் தொடர்ந்து தங்கியிருக்க அவர் அனுமதி கோரி தாக்கல் செய்த மேன்முறையீடு 18 ஆம் திகதி அங்குள்ள நீதிமன்றத்தில் ஆராயப்படவுள்ளது. பெரும்பாலும் அவருக்கு டுபாயில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படமாட்டாதென அங்கு சென்ற வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பதாக தகவல்.
இலங்கைக்கு நாடு கடத்தப்படும் போது மதுஷை டுபாயில் இருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று இலங்கைக்கு கொண்டுவந்து விமான நிலையத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக தகவல்.
டுபாயில் விடுவிக்கப்பட்ட மதுஷின் சகாக்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டமை போலன்றி மதுஷ் தனிப்பட்ட முறையில் தங்களிடம் கையளிக்க வேண்டுமென்ற இலங்கை அரசின் கோரிக்கையை டுபாய் ஏற்றுக்கொண்டுள்ளது.