இலங்கை

” நாங்கள் சாப்பிடுவது – குடிப்பதை தேடிய அரசு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியது ” – மாநாயக்கர்களிடம் சொன்ன மஹிந்த !

கண்டிக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ,அங்கு தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மாநாயக்க தேரர்களை சந்தித்து அவர்களின் ஆசியை பெற்றார்.

” நானும் எனது குடும்பமும் என்ன சாப்பிடுகிறோம்,என்ன குடிக்கிறோம் ,என்ன செய்கிறோம் என்று தேடிய அரசு முக்கியமான விடயமான நாட்டின் தேசிய பாதுகாப்பை தேடிப்பார்க்க தவறி விட்டது.அமைதியான நாட்டை நாங்கள் கையளித்தாலும் இப்போது மக்கள் வீதியில் இறங்கி நடந்து செல்லவே பயப்படும் நிலைமை உருவாகியுள்ளது ” என்று மாநாயக்க தேரர்களிடம் விளக்கினார் மஹிந்த