Breaking News

நவீன வசதிகளுடனான பொதுப்போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிகுந்த நகர்ப்பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைக்கக்கூடிய வசதிகளுடன் பொதுப்போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்காக தற்போதுள்ள பேருந்துகளை விட மேலும் சொகுசு வசதிகளுடன் கூடிய குறுந்தூரப் போக்குவரத்துக்குப் பொருத்தமான 200 பேருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய தேவையுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.