இலங்கை

” நல்லாட்சி அரசாங்கத்தினால் மலையக மக்களுக்கு நயவஞ்சகம் ” -ஆறுமுகம் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை வருடகாலகாலமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் மலையக
மக்களுக்கு நயவஞ்சகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின்
தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்
தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் நுவரெலியாவில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன்
தொண்டமான் கூறியதாவது ,

நல்லாட்சி எனும் அரசாங்கம் கடந்த நான்கரை வருடகாலமாக
மக்களின் தேவை விருப்பங்களை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை. கடந்த
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் விட்டு சென்ற அபிவருத்திகளை மேலும்
தொடரவேண்டுமனால் 2019ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பெரமுன
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாயவுக்கு மக்கள் வாக்களித்து
அவரை ஜனாதிபதி கதிரையில் அமரவைத்தால் மாத்திரமே முன்னெடுத்து செல்லலாம் அவர் ஜனாதிபதியானதும் மலையகமக்களுக்கு விஷேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதேபோல் நல்லாட்சிஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படாத பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் எமது ஜனாதிபதியின் ஊடாக செய்துகாட்டமுடியும் – என்றார் ஆறுமுகன்

-பொகவந்தலாவ நிருபர்-