உலகம்

நருஹிதோ ஜப்பானின் 126 ஆவது பேரரசராக முடிசூடினார்



ஜப்பானின் 126 ஆவது பேரசராக இந்த ஆண்டு மே மாதம் முதலாம் திகதி நருஹிதோ பேரரசர் நியமிக்கப்பட்ட நிலையில் அவரது முடிசூட்டு விழா இன்று நடைபெற்றது.

ஜப்பானின் பேரரசராக இருந்த அகிஹித்தோ கடந்த மே மாதம் பதவி விலகியதை அடுத்துஇ 126ஆவது பேரரசராக நருஹித்தோ அறிவிக்கப்பட்டார்.

பல நூற்றாண்டுகளாக ஜப்பான் மக்கள் பின்பற்றும் பாரம்பரிய முடிசூட்டு விழாவில் பங்கேற்க காரில் வந்த பேரரசர் நருஹித்தோவுக்கு வழிநெடுகிலும் வரவேற்பளித்தனர்.

பல உலகத் தலைவர்கள் பலர் பங்குபற்றிய இந்த முடிசூட்டு விழா பிற்பகல் டோக்கியோ நகரில் உள்ள இம்பீரியல் அரச மாளிகையில் இடம்பெற்றது.

1817ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறு தனது பதவியை விட்டு விலகிய முதலாவது ஜப்பானிய பேரரசராக அகிஹித்தோ வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இதனையடுத்து 2019 மே மாதம் முதலாம் திகதி முடிக்குரிய இளவரசரான நருஹிதோ ஜப்பானின் 126 ஆவது பேரரசராக நியமிக்கப்பட்டார்.