இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – றிஷார்ட்

 

” நம்பிக்கை நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.அது வரட்டும் ”

இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன்.

எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கருத்துக் கேட்டபோதே இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,

” நம்பிக்கை இல்லாத எந்த வேலையையும் நான் இதுவரை செய்ததில்லை.முஸ்லிம் பெயரை கொண்டு தீவிரவாதிகள் செயற்பட்டதால் எங்களையும் அதனுடன் தொடர்புபடுத்த பலர் படாத பாடு படுகின்றனர்.ஆனால் இனவாத பின்னணி கொண்ட அந்த முயற்சிகள் வெற்றியடையாது.அவர்கள் சொல்வதை நிரூபிக்க முடியாது.நம்பிக்கையில்லா பிரேரணை வரட்டும்.அதனை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன் ”

என்றார் றிஷார்ட்