உலகம்

நடிகை டோரிஸ் டே காலமானார்.

பிரபல ஹொலிவுட் நடிகை டோரிஸ் டே தமது 97வது வயதில் காலமானார்.
பிலோ டோக், கலமிட்டி ஜேன் போன்ற திரைப்படங்களில் நடித்த அவர், ஹொலிவுட்டின் மிகப்பிரபலமான பெண் நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
ஆரம்பத்தில் பாடகராக கலைவாழ்வை ஆரம்பித்த அவர் பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பிரபல்யமடைந்தார்.
ரொக் ஹட்சனுடன் இணைந்து அவர் நடித்த திரைப்படங்கள் 50-60களில் அதிகூடிய வசூல் சாதனையை படைத்துள்ளன.