உலகம்

நடிகர் கமல்ஹாசன் மீது பாதணிகள் வீச்சு

நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் நேற்று மதுரை – திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் நடத்தினார்.
இதன்போது அவர் மீது பாதணிகள் வீசி எறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மகாத்மா காந்தியை கொலை செய்த நதுராம் கோட்சே, சுதந்திர இந்தியாவின் முதலாவது இந்து தீவிரவாதி என்று அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்தே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பாரதியே ஜனதா கட்சி ஆதரவாளகள் உட்பட 11 பேருக்கு எதிராக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.