உலகம்

நடன நிழ்வில் அசம்பாவிதம் 9 பேர் பலி

பிரேஸிலின் மிகப்பெரிய நகரமான சாஹோ பாலோவில் இடம்பெற்ற மிகப் பிரமாண்டமான நடன நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதோடு, ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த நடன நிகழ்வில் சுமார் 5,000 பேர் பங்கேற்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவவதாக தகவல் பரவியதையடுத்து, நடன நிகழ்வில் பங்கேற்றவர்கள் அச்சத்தால் தப்பிச் செல்வதற்கு முயல்கையில், நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்துள்ளதாகவும், அவர்களை ஏனையவர்கள் ஏறி மிதித்துச் சென்றதால் இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு சந்தேகநபர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூட்டு சத்தத்தை கேட்ட மக்கள் அச்சமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாவோ பாலோ மாநில ஆளுநர் ஜோவா டோரியா உயிரிழப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.