இலங்கை

நகைகளை கடத்திய சிங்கப்பூர் தம்பதியினர் கைது !

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இரண்டரை கோடி ரூபா மதிப்புள்ள நகைகளை சட்டவிரோதமாக கடத்திய சிங்கப்பூர் தம்பதியரை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

55 மற்றும் 45 வயதுடைய சிங்கப்பூர் பிரஜைகளான இவர்கள் சிங்கப்பூரில் முன்னணி பணப்பரிமாற்று நிறுவனத்தின் உரிமையாளர்களாவர்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை இருவரும் சுமார் ஆறு முறை இலங்கைக்கு பயணம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்.க்யூ -468 விமானத்தில் இருவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

இவர்களின் கால்சட்டை மற்றும் பைகளில் இருந்து நகைகள் மற்றும் பதக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.