விளையாட்டு

‘த ஹன்ரட்’ இலங்கையைச் சேர்ந்த 24 பேர் ஏலத்தில்

 

இங்கிலாந்து கிரிக்கெட் சபை அடுத்த வருட நடுப்பகுதியில் நடத்தவுள்ள, அணிக்கு 100 பந்துகள் கொண்ட “த ஹன்ரட்” கிரிக்கெட் தொடருக்கான, வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் இந்தவாரம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், ஏலத்தில் 24 இலங்கை வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஏலத்தில் அதிக விலையில், பங்கேற்கும் வீரராக நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க காணப்படுகின்றார்.

லசித் மாலிங்கவின் ஆரம்ப விலையாக 125,000 யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ஏனைய வீரர்களின் விலைப்பட்டியில் கீழே தரப்பட்டுள்ளது)

இத்தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில்இ இங்கிலாந்தின் 7 பிராந்தியங்களை சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன.

சௌத்எம்ப்டன் பிராந்தியத்தை சேர்ந்த சௌத்தர்ன் பிரேவ் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன பயிற்சியாளராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

£125,000

· LASITH MALINGA

£75,000

· DIMUTH KARUNARATNE

· KUSAL PERERA

£50,000

· DHANANJAYA DE SILVA

· ANGELO MATHEWS

· ISURU UDANA

· LAHIRU THIRIMANNE

£40,000

· DINESH CHANDIMAL

· NIROSHAN DICKWELLA

· AVISHKA FERNANDO

· DANUSHKA GUNATHILAKA

· SURANGA LAKMAL

· KUSAL MENDIS

· DASUN SHANAKA

· THISARA PERERA

· NUWAN PRADEEP

· LAKSHAN SANDAKAN

NO RESERVE PRICE

· WANINDU HASARANGA

· LAHIRU KUMARA

· JEEVAN MENDIS

· KASUN RAJITHA

· SEEKKUGE PRASANNA

· RAMITH RAMBUKWELLA

· UPUL THARANGA