விளையாட்டு

தோனியை அறிவுறுத்தும் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கட் அணி எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் மகேந்திரசிங் தோனியை 5ம் இலக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமது தனிப்பட்ட கருத்தின்படி, இந்திய அணி ரோஹித் ஷர்மா மற்றும் ஷிக்கார் தவானை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறக்கி, மூன்றாவது வீரராக கோலி களமிறங்குவார்.
நான்காவது துடுப்பாட்ட வீரராக ஒருவரை களமிறக்கி, ஐந்தாவது துடுப்பாட்ட வீரராக தோனி களமிறங்க வேண்டும்.
ஆறாம் இலக்கத்தில் ஹார்டிக் பாண்டியா களமிறங்குவாராக இருந்தால், அவரது அதிரடியான துடுப்பாட்டம் இந்தியாவிற்கு கைகொடுக்கும்.
இதன்போது பாண்டியாவோடு இணைந்து தோனியும் அதிரடியாக துடுப்பாட முடியும் என்று டெண்டுல்கர் கூறியுள்ளார்.