விளையாட்டு

தோனியே சிறந்த ஃபினிசர் – மலிங்க புகழாரம்

தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் எம்.எஸ்.தோனி தனது மெதுவான துடுப்பாட்டத்துக்காக அதிக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்த தொடரின் பின்னர் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இருப்பினும், தோனி இன்னும் ஓரிரு ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

35 வயதான மலிங்கா, எம்.எஸ். தோனி இன்னும் உலக கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிசர் என்றும், இளைஞர்கள் அவரது அனுபவத்திலிருந்து பயனடையலாம் என்றும் கூறியுள்ளார்.