உலகம்

தோனியின் கோரிக்கைக்கு இந்திய இராணுவத் தளபதி அனுமதி

 

கெளரவ லெப்டினன்ட் கேர்ணலாக உள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி, இராணுவ (டெரிட்டோரியல் ஆர்மி) பாரசூட் ரெஜிமெண்ட்டுடன் 2 மாதங்கள் தங்கி பணிபுரியப் போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு சபைக்கு தகவல் தெரிவித்தார். எனவே மே.இ.தீவுகளுடன் நடைபெறவுள்ள தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றார்.

இந்நிலையில், தோனியின் கோரிக்கையை ஏற்று இராணுவத் தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் தோனி கலந்துகொள்ள உள்ளார். இருப்பினும் பாதுகாப்புத்துறையில் கௌரவப் பதவியில் இருப்பதால் களத்தில் நடைபெறும் செயல்பாடுகளில் தோனி பங்கேற்க அனுமதியில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.