Breaking News

தோட்டத் தொழிலாளர் தீபாவளி முற்பணம் – அமைச்சரவை அனுமதி !

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஐயாயிரம் ரூபா முற்பணக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை இன்று அங்கீகாரமளித்துள்ளது.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

அமைச்சர் திகாம்பரம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதுடன் இதற்கான நிதி இலங்கை தேயிலை சபையில் இருந்து வழங்கப்படவுள்ளது.

இதேவேளை பெருந்தோட்ட கம்பனிகளும் பத்தாயிரம் ரூபா முற்பணத்தை வழங்க தீர்மானித்துள்ளதால் மொத்தமாக 15 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணமாக வரும் 20 ஆம் திகதிக்குள் தொழிலாளருக்கு வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.