Breaking News

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது அரசு !

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தபோது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அடுத்த ஜனவரி முதல் மேற்கொள்ளப்படுமென்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

இதுவரை அறிவிக்கப்பட்ட முன்மொழிவுகள்..

* 25 பில்லியனிற்கும் அதிகமான மாதாந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு தற்போதைய 8 வீத வட் வரி தொடரும்

* வரிகள் தொடர்பான மக்களின் குறைபாடுகளை விசாரணை செய்வதற்கு புதிய மேல்முறையீட்டு
நீதிமன்றம்

* இலங்கையின் வரிவருமானத்திற்கு 50 வீதத்திற்கும் மேல் பங்களிப்பு செய்யும் சிகரெட்,தொலைத்தொடர்பு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றிற்கு விசேட பொருட்கள் சேவைகள் வரி

* வெளிநாடுகளில் வாழ்பவர்கள் இலங்கையில் ஆடம்பர தொடர்மாடிகளை கொள்வனவு செய்ய அனுமதி

* நாடு முழுவதும் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்பட உள்ளன. ரூ. 3,000 மில்லியன் உதவித்தொகை திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்த திட்டத்தில் பங்கேற்பதன் அடிப்படையில் தொழிற்கல்வி பெறும் மாணவர்களுக்கு ரூ.4,000 மாதாந்திர கொடுப்பனவு

* ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1,400 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன்கள் பெறப்பட உள்ளன.

* கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு 2021 டிசம்பர் 31 வரை 50% வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

* குருகெதர கல்வித் திட்டங்களை மாணவர்கள் பார்க்க கிராமப்புற பாடசாலைளுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட உள்ளன. ரூ .3,000 மில்லியன் ஒதுக்கீடு

* கொவிட் பாதிக்கப்பட்ட துறைகளின் ஊழியர்களுக்காக புதிய காப்பீட்டு திட்டம்.

* நாடு முழுவதும் 4ஜி கவரேஜ் வழங்கி டிஜிட்டல் இலங்கையை உருவாக்க 15,000 மில்லியன் முதலீடு செய்ய திட்டம்.

* சமூக பாதுகாப்புக்காக சிறப்பு பொலிஸ் வாகனங்கள்

* தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக ரூ .8 பில்லியன்

* வழக்கமான வீட்டு சந்தையை ஊக்குவிக்க வருமான வரி விலக்கு.

* தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடற்படைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு. ஏனைய படைகளுக்கும் உபகரணங்களுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

* வருமான வரி செலுத்துவோருக்கு எளிய ஒன்லைன் வருமான முறை

* புதிய நிறுவனங்களைத் தொடங்க இளைஞர்களுக்கு கடன் வழங்க நிதி

* விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வரிகளிலிருந்து விலக்கு

* தொலைத்தொடர்பு, மதுபானம், சிகரெட், வாகனங்கள் மற்றும் பந்தயங்களுக்கு சிறப்பு பொருட்கள் மற்றும் சேவை வரி

* 6% வளர்ச்சி விகிதத்தை பராமரிக்க எதிர்பார்க்கிறது, பணவீக்கம் சுமார் 5%, பட்ஜெட் பற்றாக்குறை 4% ஆக குறைக்கப்படும்.