Breaking News

தொண்டாவின் தீர்மானம் 13 ஆம் திகதி !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் 13 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளது.

காங்கிரசின் மாவட்டத் தலைவர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அன்றைய தினம் கொட்டகலையில் கூடி தேசிய சபையில் ஆராய்ந்து இறுதி முடிவை எடுப்பார்களென காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக இன்றைய தினம் தேசிய சபை கூடி ஆராயவிருந்தபோதும் அது பிற்போடப்பட்டது .