Breaking News

தொண்டாவின் ஏற்பாட்டில் திருப்பதி செல்கிறார் ராஜித்த !

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 15 ஆம் திகதி திருப்பதி வெங்கடாஜலபதி தேவஸ்தானத்திற்கு செல்லவுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் இதற்கான ஒழுங்குகளை செய்துள்ளார்.அரசுடன் இணைவது தொடர்பில் அமைச்சர் ராஜித்தவுடன் கடந்த சில வாரங்களாக பேச்சுக்களை நடத்திவந்த ஆறுமுகம் தொண்டமான் அந்த சிநேகபூர்வ அடிப்படையில் இந்த பயணத்தை ஒழுங்கு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இந்திய வர்த்தகரான ஆறுமுகத்தின் சிநேகிதர் ஒருவருக்கும் சுகாதார அமைச்சின் முக்கிய வேலைத்திட்டமொன்றை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மேலும் அறியமுடிந்தது.