Breaking News

தொண்டமானின் பூதவுடலை கொண்டு செல்ல விசேட ஹெலியை வழங்கியது அரசு !

 

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலை அவரது சொந்த இடமான வெவண்டனுக்கு கொண்டுசெல்ல விசேட ஹெலிகொப்டரை வழங்கியுள்ளது அரசு.

ஜனாதிபதி கோட்டாபய , பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் விசேட பணிப்புரைக்கமைய வழங்கப்பட்டுள்ள இந்த ஹெலி , அவரது குடும்ப உறுப்பினர்களையும் ஏற்றிச் செல்லவுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் அமரர் ஆறுமுகத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி பிரதமர் உட்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்பின்னர் கட்சித் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் பூதவுடல் அதன்பின்னர் வெவண்டனுக்கு எடுத்துச் செல்லப்படும்.