விளையாட்டு

தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியாஅவுஸ்திரேலிய, நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட்போட்டியில், அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்களால் வெற்றிபெற்று, மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை வெள்ளையடிப்பு முறையில் கைப்பற்றியுள்ளது.

416 என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி, 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

நியுசிலாந்து சார்பில் கொலின் டி கிராண்ஹோம் மாத்திரமே குறிப்பிடத்தக்க 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். நெதன் லயன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

முன்னதாக அவுஸ்திரேலிய முதல் இனிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 454 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் மானுஸ் லபுஸ்ச்சேன் 215 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

நியுசிலாந்து தனது முதல் இனிங்சில் 256 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்நிலையில் தனது இரண்டாவது இனிங்சில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், அவுஸ்திரேலியா தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

ஆட்ட நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் மானுஸ் லபுஸ்ச்சேன் தெரிவானார்.