உலகம்

தொடரும் தாக்குதல் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்


சிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளpல், துருக்கி தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொள்வதை தடுப்பதற்கு, அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கி ‘கடுமையான விளைவுகளை’  சந்திக்க நேரிடும் என, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளதோடு, துருக்கி மீது, புதிய பொருளாதாரத் தடைகளை எதிர்பார்ப்பதாக திறைசேரியின் செயலாளர் ஸ்டீவன் முனுச் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்தத் தீர்மானம், துருக்கிய ஊடுருவலை தூண்டியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, புதன்கிழமை தாக்குதல் தொடங்கிய காலத்தில் இருந்து, 100,000ற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குர்திஸ் போராளிகள் மீதான துருக்கியின் இந்த படை நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள போதிலும் இந்த கண்டனங்களுகோ அல்லது அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டிரம்பின் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோமென தெரிவித்துள்ள துருக்கி சிரியா மீதான தாக்குதல் தொடருமெனவும் உறுதிப்படுத்தியுள்ளது.

எல்லைப் பகுதியில் உள்ள குர்திஸ்  நிலைகளை அழிப்பதன் மூலமே எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டை மீண்டும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தமது கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோமெனவும் துருக்கிய வெளிவிவகார அமைச்சர், மெவுல்ட் காவ்சக்லோ தெரிவித்துள்ளார்.