விளையாட்டு

தொடரும் கோஹ்லியின் சாதனைகள்; பிரட்மனின் சாதனையும் தகர்ப்புஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, டெஸ்ட் போட்டிகளில் 7 தடவைகள் 200 ஓட்டங்களை கடந்ததன் மூலம் அதிக தடவைகள் 200 ஓட்டங்களைக் கடந்தவர் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இதன் மூலம் முன்னாள் வீரர்களான. இலங்கை அணியின் மஹேல ஜயவர்தனஇ இங்கிலாந்து அணியின் வொலி ஹமோன்ட் ஆகியோரின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

தென்னாபிரிக்க – இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடும் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களை கடந்திருந்தார்.

இதன் மூலம் கோஹ்லி, அணித்தலைவராக அதிக தடவைகள் டெஸ்ட் போட்டிகளில் 150 ஓட்டங்கள் கடந்த வீரராக, அவுஸ்திரேலிய அணியின் சாதனை நாயகன் டொன் பிரட்மனின் சாதனையினை முறியடித்திருக்கின்றார்.

மேலும், அதிக தடவைகள் 200 ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனை டொன் பிரட்மன்; வசம் காணப்படுகின்றது. அவர் 52 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி, 12 தடவைகள் அவர் 200 ஓட்டங்களை கடந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார 11 தடவைகளும், மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா 9 தடவைகளும், 200 ஓட்டங்களை கடந்து சாதனைப் படைத்துள்ளனர்.

இந்நிலையில் முதல் மூன்று இடங்களில் உள்ள வீரர்கள் அனைவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில்,விராட் கோஹ்லி அவர்களது சாதனையை முறியடிப்பார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.