Breaking News

தொடரும் கல்முனை போராட்டங்கள் ! ஹாரிஸ் எம் பி களத்தில் – சி.வி விக்னேஷ்வரன் நாளை கலந்து கொள்கிறார் !

இன்று ஞானசார தேரரின் வருகையையடுத்து உண்ணாவிரதத்தை நிறுத்தியிருந்த கல்முனை பிக்கு மீண்டும் இன்று மாலை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார் .

நாளை முன்னாள் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட்ட குழுவினர் தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்த கல்முனை செல்லவுள்ளனர்.

அதேபோல மூன்றாவது நாளாக நடைபெறும் கல்முனை முஸ்லிம் மக்களின் சத்தியாகிரக போராட்டத்தை வலுப்படுத்த பல அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்திருந்த இந்த போராட்டம் மூன்றாவது நாளான இன்று இரவு 10 மணியை தாண்டியும் மக்கள் வெள்ளம் திரளாக கூடி நிற்கிறது

பந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ரோஷன் அக்தர், எம்.எஸ்.உமர் அலி, ஏ.சி.ஏ. சத்தார், ஏ.ஆர்.அமீர் , கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம். சித்தீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் , தேசிய காங்கிரஸ், மற்றும் பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், உலமாக்கள், பெரும்திரலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

photos – Shihan Farook ( journalist)