விளையாட்டு

தொடரும் ஆப்கானின் தோல்விகள்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 262 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களில் 200 ஓட்டங்களை மாத்திரமே பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இதன்படி பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்குபற்றிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.