இலங்கை

தைப் பொங்கலை கொண்டாடத் தயாராகும் மக்கள் !

இந்துக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகையை நாளைய தினம் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன .

அந்த வகையில் மக்கள் அம்பாறை மாவட்டத்தில் பொங்கல் வியாபார நடவடிக்கைகள் களை கட்டியுள்ளன .

கல்முனை பாண்டிருப்பு உள்ளிட்ட சந்தை பகுதியில் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதோடு , மக்கள் மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாடுவதற்கு தயாராகி வருவதை காணக்கூடியதாக உள்ளது.

நாட்டின் பலபாகங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரங்கள் களைகட்டியுள்ளதுடன் தமிழ் மக்ள் அனைவரும் பண்டிகையை கொண்டாடத் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

பாறுக் ஷிஹான்