Breaking News

தைப்பொங்கல் கொண்டாட்டம் குறித்த அறிவுறுத்தல்கள் – வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன்

நாளை (14) தைப்பொங்கல் தினத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு செல்லுதல், புத்தாடை கொள்வனவு செய்தல், ஆபரணம் வாங்குதல் மற்றும் வழிப்பாட்டு தலங்களுக்கு செல்லுதல் போன்ற வழக்கமாக மேற்கொள்ளும் பழக்கங்களை இம்முறை தவிர்த்துக்கொள்ளுமாறு வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் அறிவுறுத்தியுள்ளார்.

இம்முறை இந்த தைப்பொங்கலை வீடுகளில் இருந்தவாறே கொண்டாடுவதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களது உறவினர்களினதும் நண்பர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் ஒன்று கூடுதல், முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லுதல் போன்றவற்றையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் 19 நோயானது முதியோர்கள், நீரிழிவு நோயுள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு பாரிய ஆபத்தை விளைவிக்கும் திறனுடையது எனவும் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் சுட்டிக்காட்டினார்.