உலகம்

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது பாஜக

 

இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.

48 பக்கங்கள் அடங்கிய பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள முக்கிய வருமாறு:-

* கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.25 லட்சம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* விவசாய கடனுக்கு வட்டி கிடையாது. 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* தேசிய பாதுகாப்புக்கு பாஜக அரசு முன்னுரிமை தரும்.

* விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் அட்டைகள் வழங்கப்படும்.

* 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டித்தரப்படும்.

* நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், நாங்கள் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவை நிறைவேற்றுவோம்.

* 60 வயதிற்கு மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத்தை உறுதி செய்வோம்.

* 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டொலர்கள் மற்றும் 2032 ஆம் ஆண்டில் 10 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரம் இருக்கும்.

* உள்கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீட்டு முதலீடு.

* மத நம்பிக்கையை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியான நடவடிக்கை.

* பாராளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு.

* சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்.

* விவசாயிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை.

* நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.

* நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

* தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விரைவாக ராமர் கோயில் கட்ட முயற்சி எடுப்போம்.

* ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிதாக்கப்படும்.

* இஸ்லாமிய பெண்களின் உரிமையை நிலைநாட்டும் முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்படும்.

* பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும்.

* சிறு விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம் அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும்.

* விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.