Breaking News

தேர்தல் வன்முறை – பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 11 பேர் கைது !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வன்முறைகளை ஏற்படுத்தினார்களென கூறி பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி வன்முறைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.