Breaking News

தேர்தல் நடத்த இன்னும் 3 மாதகாலமாவது செல்லலாம் – ஜனாதிபதி அமைச்சரவையில் கவலை !

தேர்தல் ஆணைக்குழு தலைவரின் கருத்துக்களை பார்க்கும்போது பொதுத் தேர்தலை நடத்த இன்னமும் 3 மாதகாலமாவது செல்லுமென எண்ணவேண்டியுள்ளதாக நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

“நீதிமன்ற தீர்ப்பு வந்து 9 தொடக்கம் 11 வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்ப்படுமென்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். அப்படியாயின் எப்படியோ இன்னும் மூன்று மாதகாலங்களுக்கு தேர்தல் இழுபடப் போகிறது. ஏற்கனவே 3 மாதம் இழுபட்டதால் மொத்தமாக 6 மாதம் நாட்டின் பணிகள் தடைப்பட்டு கிடக்கும் நிலைமை உருவாகியுள்ளது..” என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஜனாதிபதி.

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் விடயத்தில் அரசியல் தலையீடுகள் இல்லையென்றும் சில அதிகாரிகளே ஒத்துழைப்பை வழங்க மறுக்கிறார்களென்றும் ஜனாதிபதி இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.