Breaking News

தேர்தல் ஓகஸ்ட் ஐந்திலா ?எட்டிலா ? தடுமாறுகிறது தேர்தல் ஆணைக்குழு !!

 

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி நடத்த நேற்று தேர்தல் ஆணைக்குழு உள்ளூர தீர்மானித்திருந்தபோதும் ஐந்தாம் திகதி அதனை நடத்த மற்றுமொரு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இன்று காலை அறியமுடிந்தது.

இன்னும் சற்று நேரத்தில் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் கொண்ட வர்த்தமானி அரச அச்சகத் திணைக்களத்தால் வெளியிடப்படவுள்ளது.

எவ்வாறாயினும் தேர்தலை ஓகஸ்ட் ஐந்தாம் திகதியா எட்டாம் திகதியா நடத்துவதென்ற இறுதி முடிவை இன்று மாலை தேர்தல் ஆணைக்குழு மேற்கொள்ளுமென சொல்லப்பட்டது.