Breaking News

தேர்தல் ஆணைக்குழு அதிரடி – ஐ.தே க சம்மேளன நேரடி ஒளிபரப்பினை நிறுத்தியது !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளன நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த தேசிய தொலைக்காட்சி யான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கு சென்ற தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் அந்த ஒளிபரப்பினை இடைநிறுத்த உத்தரவிட்டனர்.

இவ்வாறு நேரடி ஒளிபரப்பினை செய்வதற்கு தேசிய தொலைக்காட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் கட்டணம் எதுவும் செலுத்தப்பட்டதா என்று வினவிய போதும் அப்படி எதுவும் செலுத்தப்படவில்லை என்பதை கண்டறிந்த பின்னர் இந்த ஒளிபரப்பினை நிறுத்த தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் உத்தரவிட்டதாக அறியமுடிந்தது.

இதனால் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சம்மேளனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த சமயம் தேசிய தொலைக்காட்சி தனது நேரடி ஒளிபரப்பை இடைநிறுத்தியது.