Breaking News

“தேர்தலுக்கு முன் வெளிநாடுகளுடன் எந்த ஒப்பந்தத்தையும் செய்யக் கூடாது” – மஹிந்த விசேட அறிவிப்பு

 

ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள ஒரு நிலையில் அதற்கு முன்னதாக எந்த நாட்டுடனும் ஒப்பந்தம் எதனையும் செய்யக் கூடாதென தெரிவித்து விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.

“ மிலேனியம் சவால்” ஒப்பந்தம் கைச்சாத்தாக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதுவாகினும் பாராளுமன்ற – மக்கள் ஒப்புதல் இல்லாமல் நடக்க கூடாது. தேர்தலுக்கு முன்னர் அதனை செய்யவும் முயலக் கூடாது..” என்றும் மஹிந்த அதில் குறிப்பிட்டுள்ளார்.