Breaking News

தேர்தலுக்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு !

 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டது.

முன்னாள் காலி மேயர் மெத்சிறி சில்வா இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்

இதேவேளை இந்த மனு கட்சிக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலரும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது