இலங்கை

தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் – பிரசன்ன ரணதுங்க

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பியகமவில் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவர பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் தேவை என்றும் குறிப்பிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எட்டு ஆசனங்கள் கிடைத்தது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 97 இடங்களை பெற்றுக்கொண்டது என்றும் தற்போது 150 இடங்களைப் பெற்றுக்கொள்ள கம்பஹா மக்கள் பொதுத் தேர்தலில் மேலும் ஐந்து உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.