Breaking News

தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை ஆறுதலாக தீர்மானிப்போம் – சம்பந்தன் கருத்து !

 

வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து கூட்டணி இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சமபந்தன் தெரிவித்தார்.

ஹிந்து பத்திரிகைக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் ,

“ஐக்கிய தேசியக் கட்சி ஒருமனதாக தனது வேட்பாளரை தேர்வு செய்துள்ளது. அது ஒரு ஆரோக்கியமான அறிகுறி. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் தங்கள் கொள்கை நிலைகளை, குறிப்பாக தேசியப் பிரச்சினை தொடர்பாக தெரியப்படுத்திய பின்னர், இந்த விஷயத்தை ஆழமாக பரிசீலிப்போம். அதன்பிறகு நாங்கள் ஒரு முடிவை எடுப்போம், ”

என்று அவர் மேலும் கூறினார்.