Breaking News

தேர்தலில் கோட்டாபய வெற்றி – உத்தியோகபூர்வமாக அறிவித்தார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் !

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டியதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

முக்கியமான வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் –

Gotabaya Rajapaksa – 6,924,255
Sajith Premadasa – 5,564,239
Anura Kumara Dissanayaka – 418,553
Mahesh Senanayake – 49,655
M. L. A. M. Hizbullah – 38,814
Ariyawansha Dissanayake – 34,537

பிற்போடப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறும் தேர்தல் ஆணையாளர் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச , வாக்களித்த மக்களுக்கும் புதிய ஜனாதிபதிக்கும் நன்றியை தெரிவித்தார். நாட்டின் ஜனநாயக மாண்புகளை மதித்து மக்கள் நலன் பேணுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கோட்டாபய ராஜபக்ச இங்கு கருத்து கருத்து வெளியிடுகையில் தமது பிரசாரத்தில் யார் மீதும் சேறு பூசும் வகையில் நடந்துகொள்ளவில்லையென குறிப்பிட்டார்.

வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் இன மத பாகுபாடின்றி சேவையாற்ற தாம் உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.