Breaking News

தேயிலை கொழுந்து பறிக்க சென்ற பெண் தொழிலாளி தவறி விழுந்து மரணித்த பரிதாபம் !

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்டபகுதியில் பெண் தொழிலாளி ஒருவர் தேயிலை கொழுந்து பறிக்க சென்று கொண்டிருந்த வேளை திடீரென தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாஞ்சிமலை மேல் பிரிவை சேர்ந்த 61 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான பெருமாள் அங்காயி என்பவரை இன்று காலை எட்டரை மணியளவில் உயிரிழந்துள்ளார்

குறித்த பெண் தொழிலாளி தேயிலை கொழுந்து பறிப்பதற்காக சாஞ்சிமலை மேல்பிரிவு
தோட்ட உள்ள 9 ம் இலக்க தேயிலை மலைக்கு சென்று கொண்டிருந்தபோது
வேலையிலே திடிரென தவறி விழுந்துள்ளதாகவும் உடனடியாக
டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு அவரை எடுத்துச் சென்ற போதும் போகும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

சடலம். சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன்
வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்

(நோட்டன் பிரிஜ் நிருபர் )