இலங்கை

தேசிய ரூபவாஹினியில் பாடல் பாடுகிறார் மைத்ரி

 

தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ‘சிஹினயக்கி ரே’ (கனவாகிய இரவு) இசை நிகழ்ச்சியில் இம்மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொள்கின்றார்.

இந்நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.20 க்கு தேசிய தொலைக்காட்சியினூடாக ஒளிப்பரப்பப்பட இருக்கின்றது. இந்த பாடல் தேர்வு இசை நிகழ்ச்சியில் ஜனாதிபதி தனது மனதை கவர்ந்த பாடல்களைத் தெரிவுசெய்து, அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்த இருக்கின்றார்.

இந்நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஜானக்க விக்ரமசிங்க பாடல்களை பாடவுள்ளார்.