Breaking News

தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளராக மஹேஷ் !

தேசிய மக்கள் இயக்கத்தின்  ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்த தேசிய மக்கள் இயக்கம் சற்று முன் இந்த அறிவிப்பை செய்தது.

இங்கு உரையாற்றிய மகேஷ் சேனநாயக்க , நாட்டின் மீது பற்று கொண்டவர்களே தம்முடன் இணைந்திருப்பதாகவும் ஒரே நாட்டில் ஒரே சட்டத்தின் கீழ் செயற்படும் நிலையை ஏற்படுத்துவது தமது நோக்கு என்றும் குறிப்பிட்டார் .