உலகம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனை பதவி நீக்கினார் ட்ரம்ப்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனை பதவி நீக்கியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் பெரும்பாலான விடயங்களில் உடன்படவில்லை என்ற காரணத்திற்காக அவரை பதவி நீக்கியுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஜோனின் இராஜினாமாவை தான் கோரியதாகவும், இன்று காலை அது கிடைத்ததாகவும், ட்ரம்ப் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
புதிய நியமனம் அடுத்தவாரம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோனின் சேவை தொடர்ந்து வெள்ளை மாளிகைக்கு அவசியமில்லை என்பதையும், பல விடயங்களில் அவருடன் உடன்பட முடியவில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் முதல் ஈரான் வரையான பல வெளியுறவுக் கொள்கைகளில் அவர் ஜனாதிபதியுடன் உடன்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஏப்ரல் மாதம் முதல் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வரும், போல்டன், ட்ரம்பின் மூன்றாவது பாதுகாப்பு ஆலோசகராவார்.

மைக்கேல் ப்ளின் மற்றும் எச்.ஆர். மெக்மாஸ்டர் ஆகியோரும் தேசிய பாதுகாப்பு ஆலோசர்களாக பணியாற்றி பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.