உஷ்... இது இரகசியம் !

தேசிய தொலைக்காட்சியின் அலைவரிசை ஒளிபரப்பில் தடை – அரசியல் காரணமாம்

 

இலங்கை தேசிய தொலைக்காட்சியின் உப அலைவரிசை ஒன்று நாட்டின் பல இடங்களில் ஒளிபரப்பாகாமல் தடை ஏற்பட்டுள்ளது.

அந்த அலைவரிசையினை கடத்தும் கோபுரங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதே இதற்கான காரணமென சொல்லப்படுகிறது. உரிய நேரத்தில் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மின்சக்திக்கு பொறுப்பான அமைச்சர் பிறப்பித்துள்ள கண்டிப்பான உத்தரவினால் மின்சாரக் கட்டணம் முழுமையாக செலுத்தப்படும் வரை இந்த கோபுரங்களுக்கான மின் இணைப்பு மீள வழங்கப்படமாட்டாதென தெரிகிறது .இதற்குள் அரசியல் காரணங்களும் இருப்பதாக மற்றுமொரு தகவல் தெரிவித்தது.