இலங்கை

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் மற்றுமொரு வீடு கண்டியில் முற்றுகை !

 

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய இரண்டு மாடி வீடொன்று கண்டி கண்டி , அருப்பொலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவல் ஒன்றையடுத்தே இந்த வீடு முற்றுகையிடப்பட்டதுடன் அங்கு பல்வேறுபட்ட முக்கியஸ்தர்கள் வந்து சென்றமையும் தெரியவந்துள்ளது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அங்கு தனது உறுப்பினர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது .

கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.