உஷ்... இது இரகசியம் !

உஷ்….! -” தேசிய கீதம் தமிழில் ஒலித்தால் சிக்கலாம்” – யாழில் எழுந்த சர்ச்சை !

 

யாழ்ப்பாண விமான நிலையம் இன்று பலாலியில் திறந்துவைக்கப்பட்ட நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.

முக்கியமான நிகழ்வு என்பதால் இதில் தேசிய கீதத்தை இசைக்க ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அதனை எந்த மொழியில் பாடுவது என்ற சர்ச்சை ஏற்பட்டதாக அறியமுடிந்தது.

”சிங்களத்தில் மட்டும் பாடினால் அது தமிழரிடையே விசனத்தை ஏற்படுத்தும்.அதேசமயம் தமிழ் மண்ணில் தமிழில் மட்டும் பாடினால் அது இப்போதைய தேர்தல் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் .அதனால் வெறுமனே தேசிய கீத இசையை மட்டும் ஒலிக்க ஏற்பாடு செய்யப்பட்டது ” என தகவலொன்று தெரிவித்தது.