உலகம்

தெலுங்கானாவில் காங்கிரஸுக்கு பெரும் வீழ்ச்சி

 

தெலுங்கானாவில் கடந்த சட்ட சபைத் தேர்தலில் தெரிவான காங்கிரஸின் 12 உறுப்பினர்கள் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தனர்.

அங்கு மொத்தமாக காங்கிரஸில் 18 உறுப்பினர்கள் தெரிவாகி இருந்தனர்.

அவர்களில் பலரும் கட்சித் தாவியுள்ள நிலையில், காங்கிரஸின் நிலைமை வீழ்ச்சி கண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கடந்த தேர்தலில் தென் மாநிலங்களிலேயே வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

எனினும் தற்போது இந்தநிலைமையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.