விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு விழா; 251 பதக்கங்களை அள்ளிய இலங்கை


13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நிறைவுக்கு வந்துள்ள நிலையில், பதக்கப்பட்டியலில் வழமைப்போல் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த முதலாம் திகதி, நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள, தஸரத் ரங்கசால விளையாட்டரங்கில் கோலகலமாக 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா ஆரம்பமhனது.

தொடர்ச்சியாக 10 நாட்கள் இடம்பெற்ற விளையாட்டு விழா, நேற்றைய தினம் கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

நேபாளம், இலங்கை,  இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவுகள் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 7 நாடுகளின் பங்குபற்றும், 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவானாதுஇ மூன்றாவது தடவையாக நேபாளத்தில் நடைபெற்றது.

மொத்தமாக 27 போட்டிகளில்,  17 போட்டிகள் கhத்மண்டுவிலும்,  10 போட்டிகளில் 9 போட்டிகள் பெக்கஹரா நகரிலும், மல்யுத்தப் போட்டிகள் மாத்திரம் ஜனக்பூரிலும் நடைபெறுகின்றன.

இம்முறை போட்டிகளில் 3,228 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டதோடு, இலங்கை சார்பாக 622 வீரர்கள் கலந்துகொண்டனர்.

சாதித்தது இலங்கை

13ஆவது தெற்காசியப் விளையாட்டு விழாவில், தடகளப் போட்டிகளில், 15 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த இலங்கைஇ ஆண்களுக்கான நீச்சல் போட்டியிலும் சாதித்துக்காட்டியது.

நீச்சல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 7 தங்கம், 11 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 36 பதக்கங்களை வெற்றிகொண்டுள்ளது.

இலங்கையின், மெதிவ் அபேசிங்க மூன்று தங்கப் பதக்கங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ஒட்டுமொத்தமாக  இவர், 7 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை இலங்கைக்காக வெற்றிகொண்டுள்ளார்.

ஆண்களுக்கான 200 மீற்றர் தனிநபர் கலப்பு நீச்சல் போட்டி,  100 மீற்றர்  சாதாரண நீச்சல் போட்டி,  50 மீற்றர் வண்ணத்துப்பூச்சு நீச்சல் போட்டி ஆகியவற்றிலும், மெதிவ் அபேசிங்க தங்கப்பதக்கங்களை வெற்றிக்கொண்டார்.

இந்தியா முதலிடம்

இந்தியா இந்த முறையும் பதக்கப்பட்டியலில், 174 தங்கம், 93 வெள்ளி மற்றும் 45 வெண்கலம் அடங்கலாக, 312 பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

போட்டிகளை நடத்திய, நேபாளம், 51 தங்கம், 60  வெள்ளி மற்றும் 95 வெண்கலம் அடங்கலாக, 206 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடதைப் பெற்றது.

இலங்கை 40  தங்கம், 83 வெள்ளி மற்றும் 128  வெண்கலம் அடங்கலாக, 251   பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

அதற்கு அடுத்தப்படியாக, பாகிஸ்தான்  31 தங்கங்களுடனும், பங்களாதேஷ் 19 தங்கங்களுடனும், மாலைத்தீவு ஒரு தங்கத்துடனும், பூட்டான் எவ்வித தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றாமலும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுக்கொண்டன.