விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு விழா; பதக்கங்களை அள்ளும் நேபாளம்

 

தெற்காசிய விளையாட்டு விழாவின் மூன்றாவது நாள் போட்டிகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், பதக்கப்பட்டியலில் நேபாளம் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

கடந்த முதலாம் திகதி, நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள, தஸரத் ரங்கசால விளையாட்டரங்கில் கோலகலமாக 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா ஆரம்பமhனது.

இதற்கமைய நேபாளம் 15 தங்கம், 3 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் அடங்கலாக, 26 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் அடங்கலாக, 16 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இலங்கை 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் அடங்கலாக, 26 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பூட்டான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இதுவரை எவ்வித பதக்கங்களையும் வெற்றிகொள்ளவில்லை.

நேபாளம், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவுகள் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 7 நாடுகளின் பங்குபற்றும், 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவானாது, மூன்றாவது தடவையாக நேபாளத்தில் நடைபெறுகின்றது.

மொத்தமாக 27 போட்டிகளில், 17 போட்டிகள் கhத்மண்டுவிலும், 10 போட்டிகளில் 9 போட்டிகள் பெக்கஹரா நகரிலும்இ மல்யுத்தப் போட்டிகள் மாத்திரம் ஜனக்பூரிலும் நடைபெறுகின்றன.

இம்முறை போட்டிகளில் 3,228 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவதோடு, இலங்கை சார்பாக 622 வீரர்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.