உலகம்

தெரேசா மேயின் புதிய ஒப்பந்தத்துக்கு பிரித்தானிய அமைச்சரவை இணக்கம்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான புதிய ஒப்பந்தம் பிரித்தானிய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதமர் தெரேசா மே இதனை முன்வைத்தார்.

இதில் தொழிற்கட்சியின் உறுப்பினர்களது ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான விட்டுக்கொடுப்புகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஒப்பந்தத்தில் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் ப்ரெக்சிட்டின் பின்னரும் சுங்க தொடர்புகளைப் பேணவும், சுற்றாடல் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கான நடவடிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த யோசனை ஜுன் மாத முற்பகுதியில் வாக்கெடுப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளது.